Raj Nidimoru Wedding Gifts to Samantha : பலரும் எதிர்பார்த்தபடியே சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் திருமணம் செய்துகொண்டனர். ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் பூத சுத்தி முறையில் திருமணம் நடைபெற்றது. சமந்தாவுக்கு ராஜ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்
நீண்ட நாள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமந்தா தனது காதலர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூர் ஈஷா ஆசிரமத்தில் பூத சுத்தி முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தியை அவர் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
24
மந்தாவுக்கு அதிர்ச்சி
திருமணமான முதல் நாளே, ராஜ் நிடிமோரு சமந்தாவுக்கு அதிர்ச்சி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஒரு அழகான வீட்டை அவருக்காக வாங்கி, திருமண நாளன்று பரிசளித்துள்ளார். விரைவில் புது வீட்டில் குடியேற உள்ளனர்.
34
சமந்தா-ராஜ் நட்பு
‘ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் போது சமந்தா-ராஜ் நட்பு மலர்ந்தது. நாக சைதன்யா விவாகரத்துக்குப் பிறகும், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோதும் ராஜ் ஆதரவாக இருந்துள்ளார். இந்த நட்பே காதலாக மாறியது. ராஜுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது.
44
வயது வித்தியாசம்
சமந்தா - ராஜ் நிடிமோரு இடையேயான வயது வித்தியாசம் தற்போது வைரலாகி வருகிறது. சமந்தாவுக்கு 38 வயது, ராஜ் நிடிமோருவுக்கு 51 வயது. இருவருக்கும் இடையே 12 ஆண்டுகளுக்கு மேல் வயது வித்தியாசம் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.