தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், அவ்வப்போது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் பேட்ட படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள விக்ரம் படத்திலும் கமலுக்கு வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படத்தில் சந்தனம் என்கிற கெத்தான ரோலில் செம்ம மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபுதேவா தானாம். இருவருக்கும் இந்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்த போது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.