Raashi khanna birthday special
பிரபல நடிகை ராஷிகண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.
Raashi khanna
நடிகை ராஷி கண்ணா லேடி சூப்பர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "இமைக்கா நொடிகள்" படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Raashii khanna
"இமைக்கா நொடிகள்" படத்தில் நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார்.
Raashii khanna
நடிகை ராஷி கண்ணா 2013-ம் ஆண்டு வெளியான"மெட்ராஸ் கஃபே" படத்திற்கு பின்னர் தெலுங்கில் ஒரு முன்னணி நடிகையாக அறிமுகமானார்.
Raashii khanna
2017 ஆம் ஆண்டு ஆக்ஷன் த்ரில்லர் வெளியான வில்லன் படத்தின் மூலம் மலையாள மொழி திரை உலகிற்குள் நுழைந்தார் நடிகை ராஷி கண்ணா.
Raashii khanna
நடிகை ராஷி கண்ணா பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லவ குசா, தோளி பிரேமா, இமைக்கா நொடிகள், வெங்கி மாமா, பிரதி ரோஜு பாண்டேஜ் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
Raashii khanna
பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ராஷி கண்ணா.
Raashii khanna
கடந்த 2019-ம் ஆண்டு வெங்கட் மோகன் இயக்கத்தில் வெளியான விஷாலின் அயோக்யா படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ராஷிக்கண்ணா.
Raashii khanna
டெல்லியை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராஷி கண்ணா 1990 -ம் ஆண்டு நவம்பர் 30 தேதி பிறந்தார். அவர் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Raashii khanna
பாடகி ஆக விரும்பிய ராஷி கண்ணா தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நன்கு படிக்கும் மனைவியாகவும் முதல் இடம் பிடிப்பவராகவும் இருந்துள்ளார்.
Raashii khanna
படிப்பில் அதிக ஆர்வம் காட்டிய ரராஷி கண்ணா ஐஏஎஸ் அதிகாரி ஆக விரும்பியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Raashii khanna
தனக்கு மாடலிங் செய்வதில் ஆர்வம் இல்லை என்றும், நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், தனது விதியே தன்னை நடிகையாக்கியது என்றும் ராஷி கண்ணா பேட்டி ஒன்றில் கூறுயிருந்தார்.
Raashii khanna
2014-ம் ஆண்டு வெளியான "ஜோரு" திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ராஷி கண்ணா "வில்லன், பாலகிருஷ்ணுடு, ஜவான், ஓரந்த அனுகுந்துன்னாரு மற்றும் பிரதி ரோஜு பாண்டேஜ்" ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் .
Raashii khanna
நடிகை ராஷி கண்ணா தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Raashii khanna
நடிகை ரராஷி கண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படங்களை ஒன்று சேர்த்து புதிய இமேஜாஸை ரசிகர்கள் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.