Dhanush: சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைக்கு தனுஷ் கொடுத்து உதவியது இத்தனை லட்சமா? தீயாய் பரவும் தகவல்!

First Published | Nov 29, 2021, 9:51 PM IST

நடன இயக்குனரும், நடிகருமான தேசிய விருது பிரபலம் சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில். திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மருத்துவ செலவிற்கு சில பிரபலங்கள் தானாக முன்வந்து உதவிய நிலையில், நடிகர் தனுஷ் செய்த உதவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய திரைப்பட துறையில் நடன இயக்குனராக மட்டும் இன்றி, நடிகராகவும் அறியப்பட்டவர் நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்.

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில், பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Tap to resize

விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருது, மற்றும் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, மருத்துவ கட்டணம் செலுத்த கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாக இவருடைய இளையமகன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார்.

இதனை அறிந்ததும் முதல் ஆளாக நடிகர் சோனு சூடு, இவருடைய மருத்துவ செலவுகளை ஏற்று கொள்வதாக அறிவித்தார். எனினும் 75 சதவீத நுரையீரல் பாதிப்போடு சிவசங்கர் மாஸ்டர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.

எனவே, சோனு சூட்டை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலர் இவரது சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டினர்.

கொரோனாவில் இருந்து மீண்ட சிவசங்கர் மாஸ்டர், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகை சேர்ந்த இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

கொரோனா நெகடிவ் என வந்ததால் இவரது உடலை உறவினர் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியபின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவிற்காக தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!