Pushpa 2 stamped and Allu Arjun
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது. பான் இந்தியா ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
Allu Arjun
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வரும் நிலையில், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தெலுங்கானா அரசு அனுமதி கொடுத்திருந்தது.
Pushpa 2
டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது படத்தைப் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ரேவதியின் மகன் தேஜ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Allu Arjun case
அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்ததுதான், கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Allu Arjun Summoned
உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். ஆனால், அவர் மீதான வழக்கு தொடர்பாக டிசம்பர் 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளிவந்தார்.
Allu Arjun Arrest
இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நடிகர் அல்லு அர்ஜுன் செவ்வாய் காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.