பாலிவுட்டிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த அழகி! யாருக்கும் தெரியாத பக்கங்கள்!

First Published | Dec 23, 2024, 6:44 PM IST

சில்க் பெரும்பாலும் முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவரது சகாப்தத்தின் பல கதாநாயகிகளை விட மிகவும் பிரபலமானவர். தனது காலத்தின் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக இருந்தது மட்டுமல்லாமல், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஆனார். முன்னணி ஹீரோயின்களைக்கூட மிஞ்சினார்.

Silk Smitha

தென்னிந்திய சினிமாவில் உள்ள பல நடிகைகள் மொழித் தடைகளைக் கடந்து பான்-இந்தியா ஐகான்களாக மாறியுள்ளனர், ஜெயலலிதா, ரேகா, ஸ்ரீதேவி மற்றும் ஜெயப்பிரதா போன்ற பெயர்கள் பாலிவுட்டிலும் எதிரொலிக்கின்றன. அவர்களில், ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக ஒருவர் இருந்தார். அவர்தான் சில்க் ஸ்மிதா.

Silk Smitha biography

சில்க் பெரும்பாலும் முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவரது சகாப்தத்தின் பல கதாநாயகிகளை விட மிகவும் பிரபலமானவர். தனது காலத்தின் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக இருந்தது மட்டுமல்லாமல், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஆனார். முன்னணி ஹீரோயின்களைக்கூட மிஞ்சினார்.

Tap to resize

Who is Silk Smitha?

1980கள் மற்றும் 1990 களில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த சில்க், தனது சகாப்தத்தின் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகையாகப் புகழ் பெற்றார். 17 ஆண்டுகள் நீடித்த அவரது சினிமா வாழ்க்கையில், 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

Remembering Silk Smitha

1979ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அவரது திருப்புமுனை ஏற்பட்டது. அதில்தான் அவர் "சில்க்" என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவரது மின்னல் வெட்டு போன்ற நடனக் காட்சிகளைக் காண ரசிகர்கள் தியேட்டர்களில் தவம் இருப்பார்கள். இதனால் அவர் நடிக்கும் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உத்தரவாதம் என்ற நிலை வந்தது.  சில்க் நடித்தாலே அந்தப் படம் வெற்றிப் படமாக மாறிய நிலையில், தயாரிப்பாளர்கள் தங்கள் வணிக வெற்றியை உறுதி செய்வதற்காகவே சில்க்கின் கவர்ச்சி நடனக் காட்சிகளை படங்களில் சேர்த்தனர்.

Silk Smitha movies

1960ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் பிறந்த சில்க் ஸ்மிதாவின் நிஜப் பெயர் விஜயலட்சுமி. குடும்பச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். சிறு வயதிலேயே ​​அவரது பெற்றோர் அவரை உள்ளூர் இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள்.

Silk Smitha Hit Movies

அப்போது அவருக்கு நடிகை அபர்ணாவுக்கு டச்-அப் கலைஞராகச் சேர வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் சினிமாவுக்கு வந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். வினு சக்கரவர்த்திதான் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர்தான் சில்க்கிற்கு தமிழ், நடனம், நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அதற்குப்பிறகுதான் அவர் ஒரு நடிகையாக மலர்ந்தார்.

Silk Smitha death reason

செப்டம்பர் 23, 1996 அன்று, ஸ்மிதா சென்னையில் உள்ள அவரது குடியிருப்பில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதற்குக் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நிதி நெருக்கடி, காதலில் ஏமாற்றம், கடுமையான மனச்சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

Silk Smitha Life

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'சில்க் ஸ்மிதா: குயின் ஆஃப் தி சவுத்; என்ற படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தில், சில்க் ஸ்மிதாவாக நடிகை சந்திரிகா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 2011ஆம் ஆண்டு வந்த மற்றொரு பயோ பிக் 'தி டர்ட்டி பிக்சர்'. அதில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்தார். அது வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதில் வித்யா பாலனின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

Latest Videos

click me!