விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்!

Published : Oct 08, 2025, 03:01 PM IST

Rajvir Jawanda Death: பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா விபத்தில் சிக்கிய நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
விபத்தில் சிக்கிய ராஜ்வீர் ஜவாண்டா :

பிரபல பாடகரும் - நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் கோர விபத்தில் சிக்கினார். இவர் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ராஜ்வீர் ஜவாண்டாவுக்கு தலை மற்றும் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து பகுதியிலேயே சுயநிலவை இழந்தார்.

24
மோசமடைந்து உடல்நிலை:

இவரை அடையாளம் கண்ட மக்கள், உடனடியாக ராஜ்வீர் ஜவாண்டாவை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவருக்கு தலையில் பலமாக படிப்பட்டதால் அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதுகு தண்டிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இவருடைய உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசம் அடைந்ததை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜவீரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர் .

34
இன்று காலை மரணம்:

ஆனால் சிகிச்சை ராஜ்வீர் ஜவாண்டா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் இவருடைய ரசிகர்கள் மற்றும் பஞ்சாப் திரை உலகை சேர்ந்த பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

44
இசைக்காக ஆசையை விட்டுக்கொடுத்த ராஜ்வீர்:

35 வயதே ஆகும் ராஜ்வீர் ஜவாண்டா 1990 ஆம் ஆண்டு பிறந்தார். அதேபோல் இவருடைய பாடல்கள் மற்றும் நடித்த படத்திற்கு பல பஞ்சாபி ரசிகர்கள் உள்ளனர். சிறுவயதில் இருந்தே காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்த போதிலும், இசை மீது இவருக்கு இருந்த நாட்டம் மற்றும் இவருடைய குரல் வளம் இவரை ஒரு பாடகர் ஆக மாற்றியது. பின் நடிகராகவும் மாறினார். தன்னுடைய ஆல்பம் மூலம் இசை பயணத்தை துவங்கி மிகக்குறுகிய காலத்தில் கடின உழைப்பால் சிறந்த பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்தார். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி இவர் உயிரிழந்திருப்பது பாஞ்சாபி திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories