திருமணம் செய்ய மறுத்த இளம் நடிகைக்கு கத்தி குத்து..! தயாரிப்பாளரின் அதிர்ச்சி செயலால் திரையுலகில் பரபரப்பு..!

First Published | Oct 27, 2020, 6:38 PM IST

பிரபல நடிகை ஒருவர், தயாரிப்பாளரை திருமணம் செய்ய மறுத்ததால்... அந்த தயாரிப்பாளர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சீரியலில் நாயகியாக நடித்து, பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மால்வின் மல்ஹோத்ரா. இவர் ஹோட்டல் மிலன் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் தயாரிப்பாளர் யோகேஷ் மால்வின் சிங்யிடம் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. திடீர் என யோகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மால்வினை கடந்த ஒரு வருடமாக வற்புறுத்தி வந்துள்ளார்.
Tap to resize

நடிப்பில் பிஸியாக இருக்கும் மால்வின் தொடர்ந்து இவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள் கிழமை இரவு 9 மணி அளவில், மால்வின் மல்ஹோத்ரா வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது, அந்தேரி பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி யோகேஷ் கேட்டுள்ளார். தொடர்ந்து, மால்வின் மறுத்ததால் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். மீண்டும் குத்த முயற்சித்த போது, மாளவில் தடுத்ததால் அவரது கையிலும் கத்தி குத்து பாய்ந்தது.
உடனடியாக மால்வின் மல்ஹோத்ரா... மும்பை கோகிலாபெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தயாரிப்பாளர் நடிகையை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி ஆதாரத்தை கொண்டு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை முயற்சி உள்ளிட்ட இன்னும் சில வழக்குகளின் கீழ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் நடிகை ஒருவர், திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் கத்தியால் குத்தி கொலை செய்ய துணிந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!