மாடர்ன் உடையை தவிர்த்து... சேலையில் தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்திய நிவேதா பெத்துராஜ்..!

First Published | Oct 27, 2020, 5:06 PM IST

மாடர்ன் உடையை தவிர்த்து... சேலையில் தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்திய நிவேதா பெத்துராஜ்..!
 

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.
Tap to resize

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை.
எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது சேலையிலும் புகைப்படம் வெளியிட்டு மயக்கி வருகிறார்.
தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
லாக் டவுன் நேரத்தில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
நிவேதா பெத்துராஜுக்கு மாடர்ன் உடையை விட, சேலை தான் பொருத்தமாக உள்ளது என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும் இவர் மெல்லிய பச்சை நிற சேலையில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படத்திற்கு லைக்குகள் சும்மா அள்ளியது.
அழகிய சேலையில் அசத்தல் போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ்
இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ்

Latest Videos

click me!