Priyanka Moves Forward After Robo Shankar Tragic Loss: ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, ஒருவழியாக கணவர் ரோபோ ஷங்கரின் நினைவுகளில் இருந்து மீண்டு புதிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கே உரிய பாணியில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். ஆரம்ப காலத்தில், கூட்டத்தோடு கூட்டமாக வந்து நிற்கும் ரோல்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கரின் திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் இவருடைய மிமிக்ரி மற்றும் டைமிங் காமெடி போன்றவை வெள்ளி திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது .
26
முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோபோ:
ரோபோ சங்கரின் திறமையை கண்டு ஆச்சரியப்பட்ட தனுஷ், தன்னுடைய மாரி படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் தனுஷ் உடனே கடைசி வரை பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ ஷங்கர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, அஜித், ரஜினிகாந்த், முதல் லெஜெண்ட் சரவணன் வரை ஏராளமான பிரபலங்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பின் உச்சத்தில் இருந்த ரோபோ ஷங்கர் கூடா நட்பால் குடிக்கு ஆளாகி, தீவிர மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார் .
36
மஞ்சள் காமாலை:
ஆரம்பத்திலேயே இதனை கவனிக்க ரோபோ சங்கர் தவறியதால், மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார் பின்னர் நாட்டு வைத்தியம் மூலம் இவருக்கு மஞ்சள் காமாலை நோயிலிருந்து விமோசனம் கிடைத்தது. 1 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரோபோ ஷங்கர் நடிக்க வந்த நிலையில், முன்பு கடைபிடித்த பத்தியம், உணவு கட்டுப்பாடு போன்ற கைவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய கடன் பிரச்சினை காரணமாக ஓய்வில்லாமல் உழைத்து வந்த ரோபோ சங்கர்... பட பிடிப்பிலேயே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மயங்கி விழுந்தார் .
46
ரோபோ ஷங்கர் மரணம்:
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ ஷங்கருக்கு நீர் சத்து குறைபாடு மற்றும் பிபி அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், அதற்கான மருத்துவமும் கொடுக்கப்பட்டது. பின்னர் இவருடைய உடல்நிலை மோசமடைய துவங்கியது. இவருடைய உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்கின. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்த ரோபோ ஷங்கர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் .
56
பிரியங்காவும் குவிந்த ஆதரவு:
இவருடைய இழப்பு, ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதை போல் ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் தன்னுடைய கணவரை நினைத்து பிரியங்கா அழுதபடி நடனமாடியதையும் சிலர் சர்ச்சை வட்டத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் இதற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பதிலடி கொடுத்ததை பார்க்க முடிந்தது .
66
பிரியங்காவின் புதிய பயணம்:
கணவரின் இறப்பில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கும் பிரியங்கா, தற்போது தன்னுடைய சோகம் ஒருபுறம் இருந்தாலும்... மீண்டும் தன்னுடைய புதிய பயணத்தை துவங்கியுள்ளார். அதாவது பிரியங்கா ஒரு சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. யூடியூப் சேனல் ஒன்றில் ருசி நேரம் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் பிரியங்கா பங்கு பெற உள்ளார். இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், தற்போது இது குறித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிரியங்காவின் இந்த புதிய பயணத்திற்கு... ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று வருகின்றனர் .