பெங்களூரை சேர்ந்த நடிகை பிரியங்கா மோகன், கன்னடத்தில் நடிகர் தண்டவ் ராம் ஹீரோவாக நடித்த. Ondh Kathe Hella எங்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட பிரியங்கா மோகன் 'கேங்லீடர்' என்கிற படத்தில் நடித்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இவரை பிரபலமாகியது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த... 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமான பிரியங்கா மோகனுக்கு, இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டும் இன்றி, சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்று தந்தது.
தற்போது இவரின் கைவசம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் கேப்டன் மில்லர், மற்றும் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.