நோ சொல்லிவிட்டு... தனுஷ் படத்தில் இருந்து நைசாக விலகிய டான் நடிகை - அவருக்கு பதில் கமிட் ஆனது யார் தெரியுமா?

Published : Jun 05, 2022, 03:58 PM IST

Priyanka Mohan : தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் இருந்து நடிகை பிரியங்கா மோகன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
நோ சொல்லிவிட்டு... தனுஷ் படத்தில் இருந்து நைசாக விலகிய டான் நடிகை - அவருக்கு பதில் கமிட் ஆனது யார் தெரியுமா?

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே தனது கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து கலக்கினார்.

24

பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். கடந்த மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். தமிழில் இவர் நடித்த 3 படங்களும் ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் பிரியங்கா.

34

இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ள இவர், தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால் தற்போது அவர் அப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

44

கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் தனுஷ் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பதில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Priyanka Mohan: குறுகிய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்...படு குஷியில் உள்ளாராம்..

Read more Photos on
click me!

Recommended Stories