அஜித்தை தொடர்ந்து விக்ரம் பட நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்... இது வேறலெவல் மாஸ் கூட்டணியா இருக்கே

Published : Jun 05, 2022, 02:08 PM IST

H Vinoth next movie : அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 என தொடர்ந்து 3 படங்களில் பணியாற்றிய எச்.வினோத் அடுத்ததாக விக்ரம் பட நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

PREV
14
அஜித்தை தொடர்ந்து விக்ரம் பட நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்... இது வேறலெவல் மாஸ் கூட்டணியா இருக்கே

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். சமூகத்தில் நடக்கும் நூதன திருட்டு சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி உடன் கூட்டணி அமைத்த எச்.வினோத், அவரை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்.

24

அதிரடி, ஆக்‌ஷன் கதையம்சத்துடன் செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து எச்.வினோத்துக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இது ரீமேக் படமாக இருந்தாலும், அதனை தமிழ் மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுத்து வெற்றிவாகை சூடினார் எச்.வினோத்.

34

இதையடுத்து தனது அடுத்த படமான வலிமையை இயக்கும் வாய்ப்பை அளித்தார் அஜித். இப்படத்தை அஜித் ரசிகர்களுக்கு பிடித்தவாரு பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் பணியாற்றி வருகிறார் எச்.வினோத்.

44

இந்நிலையில், ஏகே 61 படத்துக்கு பின்னர் இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடித்திருந்த விஜய் சேதுபதி, எச்.வினோத் படத்திலும் வித்தியாசமான ரோலில் நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Udhayanidhi Stalin : மாமன்னன் படத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.. திடீரென பல்டி அடித்த உதயநிதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories