என்னது! விஜய் டிவியில் இருந்து விலகும் பிரியங்கா! என்ன காரணம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 28, 2022, 08:51 PM IST

விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா. தற்போது தொகுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
என்னது! விஜய் டிவியில் இருந்து விலகும் பிரியங்கா!  என்ன காரணம் தெரியுமா?
priyanka deshpande

தொகுப்பளராக பட்டி தொட்டியெல்லாம் அறியப்பட்ட ஆங்கர் பிரியங்கா. இவரது கலகப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர்.  குறிப்பாக இவர் பிரபலமான சினிமா காரம் காபி , சூப்பர் சிங்கர் ஜூனியர் , சூப்பர் சிங்கர், தி வால் , ஸ்டார்ட் மியூசிக் , ஒல்லிபெல்லி , சூரிய வணக்கம் , இசை அன்ப்ளக்ட் , அழகிய பெண்ணே , போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

24
priyanka deshpande

இவர் விஜய் டிவி-யில் மட்டுமல்ல ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் உள்ளிட்ட சேனல்களில்  தொகுப்பாளராக புகழ் பெற்றார்.  அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் நண்பர்களுடன் அவ்வப்போது உலா வந்த இவர் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

34
priyanka deshpande

 மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பிரியங்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவருக்கு பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் கிப்ட்கள் கொடுத்து இருக்கின்றனர். அதை எல்லாம் பார்த்து பிரியங்கா நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.

44
priyanka deshpande

பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவில் பாலா உடன் பேசுகையில்  தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது. அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.அதற்கு பதில் சொன்ன பாலா "மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது" என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார்.   இதனால் தனது முடிவை மாற்றி விட்டாராம் பிரியங்கா. 


 

Read more Photos on
click me!

Recommended Stories