மணிமேகலை சொன்ன மாதிரியே நடந்துருச்சே! குக் வித் கோமாளி 5 டைட்டிலை தட்டிச்சென்றது யார் தெரியுமா?

Published : Sep 16, 2024, 01:35 PM IST

Cook With Comali Title Winner : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் அதன் வெற்றியாளர் விவரமும் கசிந்துள்ளது.

PREV
15
மணிமேகலை சொன்ன மாதிரியே நடந்துருச்சே! குக் வித் கோமாளி 5 டைட்டிலை தட்டிச்சென்றது யார் தெரியுமா?
cook with comali 5

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. காமெடி கலாட்டா நிறைந்த இந்த சமையல் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இவர்கள் தலைமையில் முதல் நான்கு சீசன்கள் நடைபெற்றது. அதில் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். அதைத்தொடர்ந்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் வெற்றிபெற்ற நிலையில், கடைசியாக நடந்து முடிந்த நான்காவது சீசனில் மைம் கோபி டைட்டில் வின்னர் ஆனார்.

25
cook with comali Judges

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பல்வேறு சச்சரவுகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. கடந்த நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கினார். இந்த சீசனில் பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், சுஜிதா தனுஷ், யூடியூபர் இர்பான், ஷாலின் சோயா போன்ற பிரபலங்கள் குக்குகளாக களமிறங்கினர்.

இதையும் படியுங்கள்... ‘கோட்’டுக்கு சோலி முடிஞ்சது! செப்டம்பர் 20ந் தேதி ரிலீஸாகும் அரை டஜன் தமிழ் படங்கள் - அதன் முழு லிஸ்ட் இதோ

35
Manimegalai vs Priyanka Deshpande

கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த வாரம் அரையிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பிரியங்கா தேஷ்பாண்டே, இர்பான், சுஜிதா தனுஷ், அக்‌ஷய் கமல் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் இறுதியில் சூப்பராக சமைத்து முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார் சுஜிதா, அடுத்ததாக பிரியங்கா, இர்பான் ஆகியோர் தேர்வாகி பைனலிஸ்ட் ஆகினர்.

45
cook with comali Finalist

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றின் போது அந்நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கும் போட்டியாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அரையிறுதி சுற்றில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மணிமேகலை. இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரியங்காவின் தலையீடு அதிகம் இருந்ததால் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை கூறி இருந்தார்.

55
cook with comali 5 Title Winner Priyanka

அதுமட்டுமின்றி என்னை இப்படி செய்த பிரியங்காவுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என அந்த வீடியோவில் வாழ்த்தியும் இருந்தார் மணிமேகலை. அவர் வாழ்த்தியபடியே தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் பிரியங்கா. அந்நிகழ்ச்சியின் பைனல் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன் ரிசல்ட் லீக் ஆகி உள்ளது. அதன்படி பிரியங்கா தேஷ்பாண்டே இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... மாலையும் கழுத்துமாக மணமேடையில் அதிதி - சித்தார்த்! எளிமையாக நடந்து முடிந்த திருமணம் வைரலாகும் புகைப்படம்!

Read more Photos on
click me!

Recommended Stories