Published : Sep 16, 2024, 01:04 PM ISTUpdated : Sep 16, 2024, 01:06 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு இன்று எளிமையான முறையில் கோவிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அதிதி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் மணிரத்னத்திடம், துணை இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த்... இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய, 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, சில விருதுகளை வாங்கிய நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார். தமிழை விட, தெலுங்கில் இவர் நடித்த படங்கள் சித்தார்த்துக்கு அதிகம் கை கொடுத்தது.
25
Siddharth afire And Divorce
திரைப்பட நடிகர் என்கிற அந்தஸ்தை அடைந்ததுமே, தன்னுடைய காதலி மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த், 4 வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். மேக்னாவை சித்தார்த் பிரிய காரணம், பிரபல முன்னணி வைத்திருந்த உறவு என கூறப்பட்டது. சில வருடங்கள் அந்த நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சித்தார்த் பின்னர் அவரை பிரேக் அப் செய்துவிட்டு, நடிகை சமந்தாவுக்கு கொக்கி போட்டு, பின்னர்... சமந்தா இவரை கழட்டி விட்டது பலரும் அறிந்ததே. இரண்டு திரைப்பட நடிகைகளிடம் இருந்து விலகிய பின்னர், சித்தார்த்தின் வாழ்க்கையில் நுழைந்த மூன்றாவது நடிகை தான் அதிதி ராவ்.
35
Aditi Rao Hydari and Siddharth Love
தெலுங்கில் வெளியான, மகாசமுத்திரம் என்கிற படத்தில் சித்தார்த்துடன் அதிதி நடித்த போது, இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியது. தங்களின் காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த ஜோடி, மும்பையில் ஒன்றாக குடியேறியபோது மீடியா கண்ணில் பட்டனர். இதை தெடர்ந்து இந்த ஜோடி.... பிரபலங்களின் திருமணம், பட விழா ஆகியவற்றில் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சித்தார்த் குடும்ப வழக்கப்படி கோவிலில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
45
Aditi Rao Hydari and Siddharth Datting
இதை தொடர்ந்து அதிதி - சித்தார்த் ஜோடி... வழக்கம் போல் தங்களின் லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கையை தொடர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் பிரபல மேகசீனுக்கு அளித்த பேட்டியில் அதிதி ராவ், தங்களின் திருமணம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் குடும்ப முறைப்படி நடக்கும் என தெரிவித்திருந்தார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தங்களின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அதிதி.
55
Aditi Rao Hydari and Siddharth Marriage Photos
இந்து முறைப்படி நடந்துள்ள இந்த திருமணத்தில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டிப்பதை பார்க்க முடிகிறது. சித்தார்த் பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா ஜம்முனு இருக்க... அதிதி எளிமையான சந்தன நிற பட்டு சேலையில், எளிமையான மேக்கப் மற்றும் ஒரே ஒரு நெக் பீஸ் அணிந்து தேவதை போல் இருக்கிறார். மேலும் இருவரும் தங்களின் காதலை பரிமாறிக்கொள்ளும் புகைப்படங்களையும் அதிதி வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினார்கள்.