செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள இவர், ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெற்றியடைந்ததை அடுத்து நடிகை பிரியா பவானி சங்கருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.