பிறந்தநாளில் ஜாக்பாட் வாய்ப்பை கைப்பற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி.! குஷியில் ரசிகர்கள்..!

First Published | Dec 31, 2020, 7:16 PM IST

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
 

இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி வரும் நிலையில் அடுத்ததாக சூப்பர் ஹிட் பட ஹீரோ படத்தில் நடிக்கு ஜாக்பார்ட் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஏற்கனனவே கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ , சிம்புவின் ’பத்துதல’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
Tap to resize

இதை தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் ’ருத்ரன்’ திரைப்படம் குறித்து சமீபத்தில் அதிகார பூர்வ தகவல் வெளியானது.
இந்தப் படத்தில் தற்போது நாயகியாக பிரியா பவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
பொங்கல் முடிந்த பின்னர் இந்த படத்தில் ஷூட்டிங் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் ’ருத்ரன்’ படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!