“ரஜினி லட்சியம் விஜய்யால் நிறைவேறுவது நிச்சயம்”... மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்...!

First Published | Dec 31, 2020, 7:14 PM IST

ரஜினியின் இந்த அறிவிப்பால் மனம் நொந்து போன ரசிகர்கள் பலரும் புலம்பியபடி சுற்றி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே வா...வா... தலைவா என கோஷமிட்டபடி, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ரஜினியின் இந்த அறிவிப்பால் மனம் நொந்து போன ரசிகர்கள் பலரும் புலம்பியபடி சுற்றி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tap to resize

மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், வேண்டாம் 2026ல் இல்லைன்னா எப்பவுமே இல்லை... நீங்கள் வாங்க தம்பி இனி... என ரஜினிகாந்த் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல் பதிவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “அதிசயம், அற்புதம் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார்... உங்கள் லட்சியம் தளபதியால் நிறைவேறும் நிச்சயம்!!...”என்ற வாசகத்துடன் முடித்துள்ளனர்.
அதில் விஜய்யின் கையை பற்றுவது போல் ரஜினிகாந்த் இருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இது ரஜினி ரசிகர்களையும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!