சூர்யாவுடன் மோதும் பிரதீப் ரங்கநாதன்.. தீபாவளி ரிலீஸ் உறுதி!

Published : May 10, 2025, 04:21 PM IST

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'டியூட்' படம் 2025 தீபாவளிக்கு வெளியாகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

PREV
14
சூர்யாவுடன் மோதும் பிரதீப் ரங்கநாதன்.. தீபாவளி ரிலீஸ் உறுதி!
Pradeep Ranganathans Dude Movie

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் 4வது படமாகும்.

24
பிரதீப் ரங்கநாதனின் 4வது படம்

தற்போது இந்தப் படத்திற்கு ‘டியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது 2025 தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்காக, இயக்குனர் கீர்த்திஸ்வரன் ஒரு வித்தியாசமான காதல் கதையை  எழுதி இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

34
பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ

குட் பேட் அக்லிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டாவது தமிழ் தயாரிப்பு இது. இந்தப் படத்தில் மூத்த நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரோகிணி  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளம் கோலிவுட் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

44
தீபாவளி ரேஸில் டியூட் படம்

நடிக்க ஆரம்பித்து சில படங்களே ஆன நிலையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார் பிரதீப் ரங்கநாதன். வருகின்ற தீபாவளிக்கு நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories