Love Insurance Kompany Movie Story in Tamil : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனின் படத்தின் கதை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.
Love Insurance Kompany Movie Story in Tamil : தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறிய பட்ஜெட் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். எதார்த்தமாக எடுக்கப்பட்ட கோமாளி படத்தை ஹிட் கொடுத்து கேமியோ ரோலில் நடித்து இன்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் ரேஞ்சிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த மகுடமாக இது பார்க்கப்படுகிறது. கோமாளி ஹிட்டுக்கு பிறகு லவ் டுடே என்ற சிறிய பட்ஜெட் படத்தை இயக்கி அதில் நடித்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.
25
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இதுதானாம்!
இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு லவ் டுடே ரூ.100 கோடி வரையில் லாபத்தை கொடுத்திருக்கிறது. அப்படியொரு ஹிட் மூவிஸ், யாருமே யோசிக்காத ஒரு திரைக்கதை. இன்றைய தலைமுறை இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூட சொல்லலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த டிராகன் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
35
Pradeen Ranganathan, Love Insurance Kompany
இந்தப் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இந்தப் படமும் அதிகளவில் லாபத்தை கொடுத்திருக்கிறது. காதல், கல்லூரி வாழ்க்கை, வேலை ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் உலகிற்கு போலி சான்றிதழால் ஏற்படும் பின்விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்டியது. இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.
45
LIK Movie, Dragon Box Office Collection, Krithi Shetty
இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷான், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது
55
Time Travel Movie, Vignesh Shivan, Love Insurance Kompany Story in Tamil
தனது காதலுக்காக மொபைல் கேஜெட் மூலமாக 2035 வரை பயணிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ஏற்கனவே விஷாலில் நடிப்பில் வந்த மார்க் ஆண்டனி டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெளியான நிலையில் இந்தப் படமும் அதே போன்று ஒரு கதையை மையப்படுத்தியிருக்கும் நிலையில் காதல் மற்றும் காமெடியுடன் இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.