பிரதீப் ரங்கநாதனுக்கு ஹார்டிக் வெற்றிகொடுத்த 'டியூட்' படத்தின் ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு!

Published : Oct 27, 2025, 05:25 PM IST

Dude OTT Release: இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான 'டியூட்' திரைப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலை எட்டிவிட்ட நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

PREV
14
பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி:

'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக மாறியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஹீரோவாக அறிமுகமான 'லவ் டுடே' படத்தை, இவரே இயக்கி நடித்தார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு இயக்குனர் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

24
அடுத்தடுத்த வெற்றி படங்கள்:

அடுத்தடுத்து இவர் நடித்த 2 படங்களும் வெற்றிப்படமாக மாறியது மட்டும் இன்றி, ரூ.100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இவர் ஹீரோவாக நடித்த மூன்றாவது திரைப்படம் 'டியூட்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கி இருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், பிரதீப் ரங்கநாதனுக்கு ஹார்டிக் வெற்றியை பெற்றுத்தருமா? என்கிற எதிர்பார்ப்புகளும் இருந்தன.

34
ரூ.100 கோடி வசூல்:

இளவட்ட ரசிகர்களை கவர்ந்த 'டியூட் ' திரைப்படம், வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து, திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்ககரின் இசையும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

44
ஓடிடி ரிலீஸ்:

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த படத்தின் ஓடிடி உரிமம் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ள நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் கசிந்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை,  நவம்பர் 14-ம் ஓடிடியில் ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் ஓடிடியில் வெளியாகும் படத்தை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories