வாய்ப்பு பிச்சை எனக்கு பிடிக்காது.! பைத்தியக்காரனா இல்லனா இப்படி இருக்க முடியாது.. பிரதீப் கொடுத்த பேட்டி!

Published : Nov 06, 2023, 12:16 PM IST

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பிரபல, யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.  

PREV
16
வாய்ப்பு பிச்சை எனக்கு பிடிக்காது.! பைத்தியக்காரனா இல்லனா இப்படி இருக்க முடியாது.. பிரதீப் கொடுத்த பேட்டி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், இதில் கலந்து கொண்ட நடிகரும், முன்னாள் போட்டியாளரும் கவினின் நண்பனுமான பிரதீப் ஆண்டனி பல சர்ச்சைகளுக்கு காரணமானவராக இருந்த போதிலும் தன்னுடைய விளையாட்டை ஸ்டாட்டர்ஜியுடன் நேர்த்தியாக விளையாடியதாகவே பார்க்கப்பட்டது.

26

இந்நிலையில் கடந்த வாரம், பிக்பாஸ் கொடுத்த பெல் டாஸ்கில் பிரதீப்பின் பெல் அடித்ததாக கூல் சுரேஷ் சொன்ன போது, கூல் சுரேஷ் பொய் சொன்னதாக கோவத்தில் அவரை மிகவும் தரைகுறைவான வார்த்தைகளால் பேசினார். இதனால் கூல் சுரேஷ் பெட்டி படுகைகளை எடுத்து கொண்டு, நான் வீட்டு போகிறேன் என புறப்பட்டதும்... அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்ததும் அனைவரும் அறிந்ததே.

பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்... போட்டியாளர்களுக்கு ஸ்வீட் அனுப்பிய கமல் - காரணம் என்ன?

36

கூல் சுரேஷின் பிரச்சனைக்காக உரிமை குரல் உயர்த்துகிறோம் என பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலர் துவங்கிய போர் கொடி... ஒரு கட்டத்தில் பிரதீப் உள்ளே இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற பிரச்சனையாக மாறியது. கமல் ஹாசனும் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக பிரதீப்பை வெளியே அனுப்பியதாக விமர்சனங்களும் பறந்தன. தொடர்ந்து பலர் பிரதீபுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவரும் நிலையில், பிரதீப் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

46

இந்த பேட்டியில் பட வாய்ப்பு குறித்து பேசி இருந்த பிரதீப், "என்னால் தயாரிப்பாளர்களிடம் சென்று, எனக்கு திறமை இருக்கிறது. அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதற்கு மனது ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி பட்ட வாய்ப்பு பிச்சை எனக்கு வேண்டாம் என கூறி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

இதைதொடர்ந்து தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி பேசிய பிரதீப், நான் இரண்டு பேரை காதலித்துள்ளேன். ஒரு பெண்ணை 7 வருடம் காதலித்தேன். பின்னர் சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவதாக நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறேன். அவர் என்னை விட்டு எப்போது செல்வார் என தெரியவில்லை. காரணம் அவருடைய வாழ்க்கையை அவர் வாழ வேண்டும் அல்லவா? நம் இஷ்டத்திற்கு நாம் அவரை இழுத்துச் செல்ல முடியாது என தெரிவித்தார்.

66

தொடர்ந்து பேசிய பிரதீப் பணம் தான் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும். பல வேலைகள் செய்து, அதில் வரும் பணத்தை கொண்டு சினிமாவில் முயற்சி செய்வேன்.  என்னை பார்த்து பலர் பைத்தியக்காரனா என நினைத்திருக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பைத்தியமாக இல்லை என்றால் சந்தோஷமாக இருக்க முடியாது என பிரதீப் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கோலிவுட்டின் ‘மைனா’வுக்கு 2-வது திருமணம்... புரபோஸ் பண்ணிய ஒரே வாரத்தில் காதலனை கரம்பிடித்தார் அமலா பால்!

Read more Photos on
click me!

Recommended Stories