கோலிவுட்டின் ‘மைனா’வுக்கு 2-வது திருமணம்... புரபோஸ் பண்ணிய ஒரே வாரத்தில் காதலனை கரம்பிடித்தார் அமலா பால்!
கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை அமலா பாலுக்கும் அவரது காதலன் ஜகத் தேசாயிக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
amala paul
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போல் மலையாள திரையுலகில் இருந்து வந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் அமலா பாலும் ஒருவர். சிந்து சமவெளி படம் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், இவருக்கு அங்கீகாரம் கிடைத்த படம் என்றால் அது மைனா தான். பிரபுசாலமன் இயக்கிய அப்படம் அமலா பாலின் கெரியருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
amala paul lover
மைனா படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறிப்பாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களின் மூலம் ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கு நெருக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.
amala paul and jagat desai
இந்த காதல் ஜோடி கடந்த 2013-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டது. இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய் உள்பட ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், நான்கே ஆண்டுகளில் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
amala paul marriage
அமலா பாலை பிரிந்த இரண்டே ஆண்டுகளில் விஜய் மற்றொரு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் விவாகரத்துக்கு பின்னர் ரத்னகுமார் இயக்கிய ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
amala paul wedding
இதன்பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அமலா பால் அங்கு, அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளிவந்த போலா படத்தில் நடித்தார். இது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இதுதவிர தெலுங்கிலும் அவ்வப்போது நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.
amala paul 2nd marriage
இந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 26-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய அமலா பாலுக்கு, அன்றைய தினம் அவரது காதலன் ஜகத் தேசாய் புரபோஸ் செய்தார். சினிமா பாணியில் அவர் செய்த புரபோசலை அன்போடு ஏற்றுக்கொண்டு அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து அசத்தினார் அமலா பால்.
amala paul wedding photos
இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீரென இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அமலா பால். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
amala paul jagat desai wedding
புரபோஸ் பண்ணிய ஒரே வாரத்தில் நடிகை அமலா பால் தன்னுடைய காதலனை கரம்பிடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று உள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... சரக்கு, பார்ட்டி என தோழிகளுடன் 50-வது பிறந்தநாளை அமர்களமாக கொண்டாடிய விஜயகுமார் மகள் அனிதா - போட்டோஸ் இதோ