விஜய், ரஜினியையே வாய்பிளக்க வைத்த பிரபாஸ்... 4 படத்தோட ஒட்டுமொத்த பட்ஜெட்டை கேட்டால் தலையே சுத்துதே...!

First Published | Dec 16, 2020, 5:15 PM IST

பிரபாஸ் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் உள்ளன. அந்த 4 படமுமே தெலுங்கை மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. 

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி 1 & 2 படங்களில் நடித்த பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். தெலுங்கை கடந்து ஒட்டுமொத்த திரையுலகின் டாப் ஸ்டாராக மாறிவிட்டார்.
தற்போது பிரபாஸ் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் உள்ளன. அந்த 4 படமுமே தெலுங்கை மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. அந்த படங்களின் பட்ஜெட்டை கேட்டால் தலை சுற்றும்படியாக உள்ளது.
Tap to resize

முதலில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்த வருகிறார். அடுத்து சாலர் படத்தில் நடிக்கப் போகிறார். அதன்பின்னர் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்க உள்ள ஆதிபுருஷ் படத்திலும், நாக் அஸ்வின் இயக்க உள்ள பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த 4 படங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் 1500 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராதே ஷ்யாம் படத்தை ரூ.200 கோடியிலும், சலார் படத்தை ரூ.300 கோடியிலும், ஆதிபுருஷ் படத்தை ரூ.500 கோடியிலும், நாக் அஸ்வின் படத்திற்கு ரூ.300 கோடியும் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 4 படத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம் மட்டும் ரூ.300 கோடி எனக்கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு 70 கோடி முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.இதை கேள்விப்பட்ட தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி ஹீரோக்களே வாய் பிளக்கின்றனராம்.

Latest Videos

click me!