தமிழ் சினிமாவில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும் திரையுலகிற்காக தன்னுடைய பெயரில் பவர் ஸ்டார் என்கிற வார்த்தையை அவரே சேர்த்துக்கொண்டார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான, 'லத்திகா' என்கிற படத்தை இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த படத்தை தொடர்ந்து, கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.
கடைசியாக கொரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
இதை தொடர்ந்து தற்போது வனிதா விஜயகுமார் ஹீரோயினாகவும், இவர் ஹீரோவாகவும் உள்ள படத்தை இயக்கி நடித்துள்ளார். அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர் மிகவும் பரிதாபமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களில் பார்க்கவே மிகவும் பரிதாபமாக உள்ளார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.