Urfi Javed: இது கிழிச்சி தச்சதா? போட்டு கிழிச்சதா? படு மோசமான உடையில் வந்த நடிகையால் காண்டான நெட்டிசன்கள்!

First Published | Nov 15, 2021, 5:34 PM IST

பிக்பாஸ் OTT நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரமே வெளியேற்றப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவேத், கடந்த சில மாதங்களாக தனது வித்தியாசமான உடல்களால் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிழிச்சி தச்சதா... போட்டு கிழிச்சதா.. என அனைவரும் குழம்பும் அளவிற்கு உடை அணிந்து வியக்க வைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள பாஸ்டியன் உணவகத்திற்கு வெளியே உர்ஃபி ஜாவேத் காணப்பட்டார். அப்போது உர்ஃபி ஜாவேத்தை விட மக்களின் பார்வை அவரின் உடையின் மீதே இருந்தது.

இவர் அணிந்திருந்த கருப்பு நிற மாடர்ன் உடையில், மார்பிலிருந்து வயிறு வரை கிழிந்திருந்தது. உர்ஃபியின் உடையை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் மிகவும் மோசமான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Tap to resize

Urfi

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என்றும்? கவர்ச்சி என்கிற பெயரில் பொது இடத்தில் கூட இப்படி மோசமாக உடை அணிவதா? என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து இதே போன்ற சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத உடைகளை அணிந்து, விமர்சனத்திற்கு ஆளாகி வரும் உர்ஃபிக்கு மட்டும் இது போன்ற உடைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறது என பலர் புலம்பி வருகிறார்கள்.

இப்படி பலர் தாறுமாறாக விமர்சனங்கள் எழுப்பி வந்தாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் வாரம் ஒரு முறையாவது இது போல் ஆடை அணிந்து புதிய பஞ்சாயத்தை கிளப்பி வருகிறார் உர்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!