வலிமை படத்தின் டிரெய்லருக்கு தற்போது உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இப்படத்தை தயாரித்து உள்ளார்.
28
2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
38
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.
48
நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
58
சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்திருந்த நிலையில், நேற்று வெளியான வலிமை படத்தின் டிரெய்லர் அதுக்கும் மேலே இருந்தது என்றே சொல்லலாம்.
68
அந்த அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள், பதைபதைக்க வைக்கும் பைக் ஸ்டண்டுகள் என பக்கா ஆக்ஷன் விருந்தாக இந்த டிரெய்லர் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
78
இந்நிலையில், வலிமை படத்தின் டிரெய்லருக்கு தற்போது உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
88
வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும், வலிமை படத்தின் டிரெய்லர் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருவதால், படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாம்.