'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!

First Published | Aug 30, 2022, 6:53 PM IST

'பொன்னியின் செல்வன் 1' படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
 

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எம்ஜிஆர் முதல் பலர் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயற்சித்த போதும், ஒரு சில காரணங்களால் முடியாமல் போனது. இந்நிலையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து, இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக, 5 மொழிகளில் திரைப்படமாக இயக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகள் இந்த படத்திற்காக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

'பொன்னியின் செல்வன் ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், பிரமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியீடு முதல் பாடல் பாடல் வெளியீடு வரை அனைத்திற்கும் விழா வைத்து வெளியிட்டனர். இதில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 

Tap to resize

ponniyin selvan

'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியான போதே... மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறும் விதமாக... பொன்னி நதி லிரிக்கல் பாடலும், விக்ரமின் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறும் விதமாக சோழா சோழா என்கிற லிரிகள் பாடலும் வெளியாகியது. படம் வெளியாகும் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டாலும், எப்போது படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.

அதன்படி படக்குழு செப்டம்பர் 6-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில், மிகப் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
 

இது குறித்து வெளியாகி உள்ள போஸ்டரில் 'வருகிறான் சோழன்' என்றும் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.  தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அவர் கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி  பிரபு, ஜெயராம், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!