அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏ.கே.62. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.