திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் டிவி ராமர்... அதுவும் என்ன ரோல் தெரியுமா?

Published : Aug 30, 2022, 02:37 PM IST

Thiruchitrambalam : திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை விஜய் டிவி பிரபலம் ராமர் மிஸ் பண்ணியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் டிவி ராமர்... அதுவும் என்ன ரோல் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி ரிலீசான படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இதுதவிர பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், விஜே பப்பு, முனீஸ்காந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

24

கடந்த ஓராண்டாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... கோப்ரா படத்துக்கு போகணும் லீவு கொடுங்க சார்.. கல்லூரி முதல்வருக்கு லெட்டர் எழுதி அலப்பறை செய்த விக்ரம் ஃபேன்ஸ்

34

அந்த வகையில், இப்படம் ரிலீசான 11 நாட்களில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இப்படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை விஜய் டிவி பிரபலம் ராமர் மிஸ் பண்ணியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

44

அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தில் முனீஸ்காந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ராமரை நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிசியாக இருந்ததால் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ராமர் இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 96 ஜானு - வா இது?.. அல்டரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்!

Read more Photos on
click me!

Recommended Stories