தமிழ் சினிமாவில், முன்னனி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அமலா பால்... இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிப்பை தாண்டி 'கடவார்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இவர் தயாரிப்பில் வெளியான இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
எனவே நடிப்பதை தொடர்ந்து, சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரிக்கவும் அமலா பால் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். அமலா பாலுக்கும், பஞ்சாபை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து (6T) மூவி திரைப்பட நிறுவனத்தினை, புதுவை மாநிலம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார்சாவடியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி பட நிறுவனத்தை கவனித்து வந்துள்ளனர்.
மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!
அப்போது அமலா பால் பவ்நிந்தர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததன் காரணமாக... பவ்நிந்தர் அமலா பாலை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை, அமலாபாலுடன் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது தான் தற்போது அமலா பால் தரப்பில் இருந்து, விழுப்புர மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது... விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாவும் கூறப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த பின்னரும், பவ்நிந்தர் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் கூறியுள்ளார். அதே போல் பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் அவர் கடந்த 26 ஆம் தேதி எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார்.
மேலும் செய்திகள்: அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனை டார்கெட் செய்யும் நடிகர் ஜெய்...! கோலிவுட்டில் கிளம்பிய புது சர்ச்சை