விஜய், ஜெயம் ரவியைத் தொடர்ந்து சிம்புவிற்கு சிக்கல்... இணையத்தில் கசிந்தது “ஈஸ்வரன்”...!

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு,  நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் இணையத்தில் வெளியானது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பைரசி இணையதளங்களில் படங்களை வெளியிட வேண்டாம் என பல்வேறு சட்டங்களை போட்டு தடுத்தாலும் இணையத்தில் புது படங்கள் லீக்காவதை தடுக்க முடியவில்லை. அதுவும் பண்டிகை காலங்களை நம்பி வெளியாகும் பெரிய ஹீரோக்களின் மெகா பட்ஜெட் படங்கள் கூட இணையத்தில் கசிவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பொங்கல் விருந்தாக போகி பண்டிகையை அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. தியேட்டர்களில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும், டெலிகிராம் செயலி மூலமாகவும் படம் வெளியானது. இது ஓட்டுமொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதேபோல் நேற்று ஜெயம் ரவியின் 25வது படமான பூமி திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படமும் சில மணி நேரங்களிலேயே பைரசி இணையதளத்தில் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் இணையத்தில் வெளியானது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் நேற்று தான் வெளியானது. படத்திற்கு விமர்சனம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், டெலிகிராம் மற்றும் பிற பைரசி வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

Latest Videos

click me!