கொண்டாடி தீர்த்த சிம்பு ரசிகர்கள்... “ஈஸ்வரன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

First Published | Jan 15, 2021, 4:10 PM IST

ஈஸ்வரன் படத்தின் முதல் நாள் ஒட்டுமொத்த வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் திரைப்படம் “ஈஸ்வரன்”. சுசீந்திரனிடம் ஆன்லைனில் கதை கேட்ட 30 நிமிடத்திலேயே இந்த படத்தை நம்ப பண்றோம் என சிம்பு ஓ.கே சொல்லும் அளவிற்கு நம்பிக்கை வைத்து ஈஸ்வரன் படத்தில் இறங்கினார் சிம்பு.

Tap to resize

2019 ஆம் ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஈஸ்வரன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் முதல் நாளே விமர்சனம், வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.
ஈஸ்வரன் திரைப்படம் ஓட்டுமொத்தமாக முதல் நாளில் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டுமே ரூ.20 லட்சம் வரையிலும் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற நாட்களை ஒப்பிடும் போது இது குறைவு தான் என்றாலும், கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு இந்த வசூல் பொங்கல் பரிசாகவே அமைந்துள்ளது.

Latest Videos

click me!