கடந்த 2016ம் ஆண்டு கார்த்தி நடித்த தோழா பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த ரசிகர் மன்றத்தினரை தாக்கிய, 3 போலீசாருக்கு 6 வருடங்கள் கழித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலீசார் ஒவ்வொருவருக்கும் தலா ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு 3 போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.