'கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகி இரண்டு மாதம் ஆக உள்ள நிலையில், தற்போது பட குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஷங்கர், 'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து, ரூ.400 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில், இயக்கி இருந்த திரைப்படம் தான் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் அரசியல் அதிரடி திரைப்படமாக வெளியான, இந்த படத்தை தில் ராஜு (வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்) நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். மேலும் இந்த படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது.
24
ராம்சரண் கரியரில் மிகப்பெரிய தோல்வி
ராம்சரண் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வந்த நிலையில், இந்த படம் அவருடைய கரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் அப்பண்ணா மற்றும் ராம் நந்தன் என்கிற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி நடித்திருந்தனர். இவர்களை தவிர ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மதுரையில் இருந்த கலெக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ஆழமான கருத்துக்களுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும்... இந்த படத்திற்கு தேவை இல்லாமல் செலவு செய்யப்பட்ட பட்ஜெட் தான், இப்படத்தின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது.
34
ரூ.400 கோடி பட்ஜெட்:
ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரை ரூ..178 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க, தற்போது படக்குழு மீது 350 துணை நடிகர்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குண்டூர் மற்றும் விஜயவாடாவை சேர்ந்த 350 துணை நடிகர்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ரூ. 1200 பணம் பெற்று தருவதாக துணை இயக்குனர் ஸ்வர்கள் சிவா உள்ளிட்ட சிலர் கூறி அழைத்து வந்த நிலையில், படம் ரிலீஸ் ஆகி பல மாதங்கள் ஆகியும், கூட சொன்னபடி பணம் கொடுக்க வில்லையாம். இது சம்பந்தமாக தற்போது போலீசில் பட குழுவினர் மீது துணை நடிகர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு உறுதுணையாக சங்கர் மற்றும் தில் ராஜு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகார் தொடர்பாக போலீசாரும் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.