Pavani - Amir selfie : அமீருடன் ஜோடியாக சுற்றும் பாவனி.. ஒருவேள அதுவா இருக்குமோ! டவுட்டில் பிக்பாஸ் ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Feb 04, 2022, 08:43 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீர் பாவனியை காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. தற்போது வெளியே வந்த பின்னரும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். 

PREV
15
Pavani - Amir selfie : அமீருடன் ஜோடியாக சுற்றும் பாவனி.. ஒருவேள அதுவா இருக்குமோ! டவுட்டில் பிக்பாஸ் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.  முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். 

25

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளை சந்தித்த போட்டியாளர் என்றால் அது பாவனி தான். முதலில் காயின் டாஸ்கில் தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல் விவகாரம், அமீர் உடன் முத்த சர்ச்சை என நீண்டுகொண்டே சென்றது. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற பாவனி, 3-வது இடத்தை பிடித்து அசத்தினார்.

35

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பாவனி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். 

45

கணவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சில ஆண்டுகள் நடிப்பை விட்டு விலகி இருந்தார். பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த பாவனி, சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். படங்களில் நடித்து வந்த சமயத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து. தற்போது அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமும் கிடைத்துள்ளது.

55

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீர் பாவனியை காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. தற்போது வெளியே வந்த பின்னரும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். சமீபத்தில் அமீருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பாவனி பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருவருக்கும் இடையே காதல் இருக்குமோ என பேசத் தொடங்கினர். ஆனால் அண்மையில் இருவரும் ஜோடியாக அளித்த பேட்டியில், காதல் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததோடு மட்டுமின்றி, தாங்கள் நல்ல நண்பர்கள் என்பதையும் தெரிவித்திருந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories