Yashika chat with Fans : நீங்க வெர்ஜினா?.... ஏடாகூடமான கேள்வி கேட்ட ரசிகருக்கு பங்கமாக பதிலடி கொடுத்த யாஷிகா

Ganesh A   | Asianet News
Published : Feb 04, 2022, 08:00 AM IST

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

PREV
15
Yashika chat with Fans : நீங்க வெர்ஜினா?.... ஏடாகூடமான கேள்வி கேட்ட ரசிகருக்கு பங்கமாக பதிலடி கொடுத்த யாஷிகா

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. 

25

இருப்பினும் இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால்... புகழ் வெளிச்சம் தேடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அந்நிகழ்ச்சி இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் வெற்றிபெறாவிட்டாலும், ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 

35

இதன் பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றிய யாஷிகா... மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், ஜீவனின் பாம்பாட்டம் ஆகிய படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

45

இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வந்த யாஷிகாவிற்கு கடந்த ஆண்டு படு மோசமான ஒன்றாக அமைந்தது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, 4 மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரே மீண்டு வந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ள யாஷிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

55

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் யாஷிகா, அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் நீங்க வெர்ஜினா?.... ஏடாகூடமான கேள்வி கேட்க, அதற்கு, ‘இல்ல நான் யாஷிகா’ என பங்கமாக பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா. இதுதவிர நிரூப் உடனான உறவு குறித்தும் நேர்த்தியாக பதிலளித்து அசத்தி உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories