‘பத்து தல’ ஷூட்டிங் முடிந்தது... அடுத்த படத்தில் சூப்பர்ஹீரோவாகும் சிம்பு - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

Published : Nov 24, 2022, 03:13 PM IST

பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சிம்பு நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
‘பத்து தல’ ஷூட்டிங் முடிந்தது... அடுத்த படத்தில் சூப்பர்ஹீரோவாகும் சிம்பு - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமோக வெற்றியை பெற்றது. கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் டான் ஆக நடித்திருந்தார் சிம்பு. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை சிம்புவுக்கு பரிசாக வழங்கி இருந்தார்.

24

இதையடுத்து பத்து தல படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இப்படத்தில் அவருடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், ஆரி நடித்த நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி உள்ளார். முஃப்டி என்கிற கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... இரண்டே படங்களில் ரூ.1600 கோடி வசூலை அள்ளிய பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா..!

34

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்பின் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல உள்ளார் சிம்பு.

44

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். தர்பார் படத்துக்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக சிம்புவை வைத்து சூப்பர்ஹீரோ கதையம்சம் கொண்ட படத்தை இயக்க தயாராகி வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜயகாந்த் படக்கதையை திருடி.. ஜவான் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்தாரா அட்லீ? - விசாரணையில் வெளிவந்த உண்மை

Read more Photos on
click me!

Recommended Stories