இரண்டே படங்களில் ரூ.1600 கோடி வசூலை அள்ளிய பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா..!

First Published | Nov 24, 2022, 2:46 PM IST

அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, திருமணமாகி குழந்தை பெற்றெடுத்த பின்னரும், சினிமாவில் படு பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ஜவான், கனெக்ட், கோல்டு, இறைவன் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதுதவிர மேலும் மூன்று படங்களும் இவர் கைவசம் உள்ளன.

இதில் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் நயன். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் நடித்துள்ள கோல்டு திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி ரிலீசாக உள்ளது.

Tap to resize

அதேபோல் கனெக்ட் மற்றும் இறைவன் படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டன. இதில் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணனும், இறைவன் படத்தை அஹமத்தும் இயக்கி உள்ளனர். இறைவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் கனெக்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Breaking: அனுமதி இன்றி 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு! வாரிசு பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவர் நடிக்க உள்ள புதிய படத்தை கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டு யாஷ் நடித்த ஜே.ஜி.எஃப் 2 மற்றும் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் மொத்தமாக உலகளவில் ரூ.1600 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நயன்தாரா நடிக்க உள்ள படத்தையும் அந்நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... வசூலில் ரூ.100 கோடியை நெருங்கும் லவ் டுடே..! முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் பிரதீப்

Latest Videos

click me!