மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!

Published : Dec 20, 2025, 09:23 AM IST

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் ஜனவரி 9-ந் தேதியும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 14-ந் தேதியும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட இருக்கிறதாம்.

PREV
14
Parasakthi Release Date Changed

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி என்கிற ரேஞ்சுக்கு கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். கோட் படத்தில் இவர் கையில் விஜய் துப்பாக்கியை கொடுத்தாலும் தற்போது விஜய்யையே எதிர்க்கும் அளவுக்கு பெரும் புயலாக மாறி இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் வெவ்வேறாக இருந்தது. ஜன நாயகன் ஜனவரி 9-ந் தேதியும், பராசக்தி ஜனவரி 14-ந் தேதியும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

24
பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றம்

ஆனால் தற்போது ஜன நாயகனுக்கு போட்டியாக ஜனவரி 10-ந் தேதி பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியலே இருப்பதாக வலைப்பேச்சு குழு தெரிவித்துள்ளது. பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான திரையரங்குகள் இருக்கின்றன. அதனால் ஜன நாயகன் போட்டியாக பராசக்தியை வெளியிட்டால், பெரும்பாலான பெரிய ஸ்கிரீன்களை பராசக்தி ஆக்கிரமித்துவிடும். அதனால் ஜனநாயகன் வசூலில் அடிவாங்க வாய்ப்பு இருக்கிறது.

34
விஜய் vs உதயநிதி

விஜய்யும் சமீப காலமாக திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திமுக ஒரு தீய சக்தி என்று விஜய் பேசியது உதயநிதியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். இதையடுத்து உடனடியாக பராசக்தி படத்தை போட்டுக்காட்ட சொல்லி இருக்கிறார். உதயநிதியின் நண்பர் ஆகாஷ் பாஸ்கரன் தான் பராசக்தி படத்தை தயாரித்திருக்கிறார். அவரும் படத்தை காட்ட, படம் பார்த்த உதயநிதி இது கன்பார்ம் பந்தயம் அடிக்கும் என சொல்லி, படத்தை ஜன நாயகனுக்கு போட்டியாக வெளியிட ஆர்டர் போட்டுள்ளாராம்.

44
தடைகளை உடைத்து சாதிக்குமா ஜன நாயகன்?

பராசக்தி ஒருபுறம் இருக்க, ஜனவரி மூன்றவாது வாரத்தில் அஜித்தின் மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கான வேலையும் நடக்கிறதாம். பெரும்பாலும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் 3 வாரம் தாக்குப்பிடிக்கும். ஆனால் ஜன நாயகனுக்கு அதிகப்படியான தியேட்டர்கள் கிடைத்துவிடக் கூடாது என்பதால், பொங்கலுக்கு முன் பராசக்தியையும், பொங்கலுக்கு பின் மங்காத்தாவையும் இறக்கிவிடுகிறார்களாம். இந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து ஜன நாயகன் வசூல் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories