கோடிகளில் இருந்து லட்சங்களாக சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆன பராசக்தி, வா வாத்தியார்..!

Published : Jan 20, 2026, 03:07 PM IST

பொங்கல் பண்டிகைக்கு ரி்லீஸ் ஆன கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய திரைப்படங்கள் வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.

PREV
14
Parasakthi and Vaa Vaathiyaar Faces Huge Drop in Box Office

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதல் ஆளாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி 10ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். இதில் ஸ்ரீலீலா, ரவி மோகன், சேத்தன், அதர்வா, குரு சோமசுந்தரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இயக்கி இருந்தார் சுதா கொங்கரா. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும், சொதப்பலான திரைக்கதையால், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

24
பராசக்தி வசூல்

கலவையான விமர்சனங்களால் பராசக்தி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிவை சந்திக்க தொடங்கியது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியும் இன்னும் 100 கோடி வசூலை எட்டவில்லை. தற்போது வரை இப்படம் 80.90 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த 9 நாட்களாக கோடிகளிலேயே வசூலித்து வந்த பராசக்தி திரைப்படம் 10-வது நாளில் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அப்படம் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.78.46 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. இதன்மூலம் ரிலீஸ் ஆனதில் இருந்து முதல்முறையாக மிக குறைவான வசூலை பராசக்தி பதிவு செய்துள்ளது.

34
வா வாத்தியார் வசூல்

பராசக்தி படத்துக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் திரைக்கு வந்த மற்றொரு படம் வா வாத்தியார். அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படுமோசமான விமர்சனங்களைப் பெற்றதால், வசூலிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அப்படம் ரிலீஸ் ஆகி ஆறு நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் தமிழகத்தில் 10 கோடி கூட வசூலிக்கவில்லை. நேற்று திங்கட்கிழமை வேலைநாள் என்பதால் வா வாத்தியார் படம் படு மோசமாக வசூல் செய்திருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் அப்படம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.37.41 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது.

44
கார்த்தியின் வா வாத்தியார்

கார்த்தி நாயகனாக நடித்த வா வாத்தியார் திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். அப்படத்தில் கார்த்தி உடன் ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, பிக் பாஸ் கெமி, தேனப்பன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். வா வாத்தியார் திரைப்படம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories