“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு திருமணம்... சீரியல் நடிகருடன் வெளியான க்யூட் கல்யாண போட்டோஸ்...!

இதையடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி சித்ராவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கூட்டு குடும்பம், அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் உடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
தமிழில் சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா கடந்த 9ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பான வழக்கில் ஆர்.டி.ஓ.விசாரணையும் நிறைவுற்று அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி சித்ராவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இத்தொடரின் தெலுங்கு ரீமேக்கில் முல்லை கேரக்டரில் நடித்து வரும் நடிகை ப்ரியங்கா நாயுடுவுக்கும் சீரியல் நடிகர் மதுபாபுவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைச் சேர்ந்த சுஜிதா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு முறைப்படி சொந்தங்கள் சூழ கோலாகலமாக நடந்துள்ள பிரியங்கா நாயுடு திருமண புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்கும் அங்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. இதையடுத்து தெலுங்கு முல்லை ப்ரியங்கா நாயுடுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
திருமண ஜோடியின் க்யூட் போட்டோஸ் சில இதோ....
Priyanka
Priyanka
Priyanka
Priyanka
Priyanka
Priyanka
Priyanka
Priyanka
Priyanka

Latest Videos

click me!