பெரிய வீட்டு பிள்ளைகளை சுழட்டி அடிக்கும் கொரோனா..! கொண்டாட்டத்தால் வந்த விபரீதம்..!

First Published | Dec 29, 2020, 5:27 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஹாலிவுட் டூ கோலிவுட் வரை கொரோனா தொற்றால் அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனில் ஆரம்பித்தது நடிகை தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் என பாதுகாப்பாக இருக்கும் பிரபலங்கள் பலரை தொடர்ந்து பதம் பார்த்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள், அந்த பெரிய குடும்பத்து வாரிசு நடிகர் வருண் தேஜுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.
Tap to resize

எந்த வித கொரோனா அறிகுறியும் இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராம்சரண் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகளான நிஹாரிகா - சைதன்யாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தார். இதில் வருண் தேஜ் உட்பட நண்பர்கள், உருவாவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராம் சரணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.
அப்படி நடத்தப்பட்ட சோதனையில் தான் தற்போது, வருண் தேஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே... மருத்துவர்களின் அறிவுரை படி தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில், ஸ்டைலிஷ் ஹீரோவான வருணுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது தெலுங்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!