விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. காரணம் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒரு எளிமையான குடும்பத்தை பற்றிய கதை என்பதால் இல்லத்தரசிகள் பலரது மனதையும் கவர்ந்துவிட்டது.
அதேபோல் இந்த தொடரில் கதிர் - முல்லைக்கு அடுத்த படியாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜோடி என்றால் அது, ஜீவா - மீனா தான் என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி கர்ப்பமாக இருந்த மீனா... அதாங்க ஹேமா ராஜ் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.
இதையடுத்து வீட்டில் எளிமையாகவும், சீரியலில் தடபுடலாகவும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
ஆனால் உண்மையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் நடிப்புக்கு இடைவேளை விட்டு ஓய்வெடுத்து வந்தார்.
இவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைப்பதை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளததால் வீட்டிலிருந்த படியே நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு செம்ம ஸ்டைலிஷ் ஆன மார்டன் உடைகளில் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மார்டன் உடையில் சும்மா அசத்தலாக இருக்கும் ஹேமாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் எங்கு தவறாக புரிந்து கொள்வார்களோ என்பதற்காகவே இது அனைத்தும் தனது பழைய புகைப்படங்கள் என்றும், விரைவில் புதிய போட்டோக்களை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
என்னம்மா உன்ன ஒரு கூட்டமே காணாவில்லை என தேடிக்கொண்டிருக்கிறது. நீ இங்க வந்து போஸ் கொடுத்துக்கிட்டு இருங்க... சீக்கிரம் சீரியலுக்கு வாம்மா என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.