பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் இந்த நடிகை தளபதி விஜய்யின் சித்தியா? ஆச்சர்ய தகவல்.!

First Published | Jan 29, 2021, 7:31 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான், தளபதி விஜய்யின் சித்தி என்கிற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
 

அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல்.
வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
Tap to resize

மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.
இந்த சீரியலுக்கு மட்டும் அல்ல, இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில், இந்த சீரியலின் ஆணி வேறாக நடித்து வருபவர் ஷீலா. பாண்டியன் ஸ்டோர் சீரியல்... அண்ணன் தம்பிகளின் தாயாக, லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரை பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவர், தளபதி விஜய்யின் சித்தி தானாம்.
தளபதியின் தாயார், ஷோபாவின் உடன் பிறந்த சகோதரியும். இவருடைய மகன் தான் நடிகர் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!