விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக நடிக்க துவங்கிய ராசி, உண்மையிலேயே கர்ப்பமானார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றார்.
இவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும், 'பாண்டியன் ஸ்டோர்' நிகழ்ச்சியில் இணைந்து நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், ஹேமாஸ் டைரி என்கிற யூ டியூப்சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யூ டியூப்பில், மேக்அப், பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு அப்பாற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
இவர் போடும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், சேனல் துங்கபட்ட இரண்டு மாதத்திலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
கூடுதல் மகிழ்ச்சியாக இந்த இவரது யூ டியூப் சேனலுக்கு தற்போது சில்வர் பட்டனும் கிடைத்துள்ளதால், உச்ச கட்ட மகிழ்ச்சியில் தன்னுடைய சேனலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து மீனா லைவ் வீடியோவில் பேசியுள்ளார்.
இரண்டே மாதத்தில் மீனாவின் யூ டியூப் சேனலுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்திற்கு ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.