கிங்டம் (Kingdom) - ஆகஸ்ட் 27, 2025
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படமும் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. கெளதம் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
மை லைஃப் வித் தி வால்டர் பாய்ஸ் சீசன் 2 (My Life with the Walter Boys Season 2) – ஆகஸ்ட் 28, 2025
ஒரு டீனேஜ் பெண் தனது பாதுகாவலர் குடும்பத்துடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் கதை. காதல், நம்பிக்கை, நட்பு போன்ற அம்சங்களுடன் இந்தத் தொடர் இருக்கும்.
தி தேர்ஸ்டே மர்டர் கிளப் (The Thursday Murder Club) – ஆகஸ்ட் 28, 2025
ஓய்வு இல்லத்தில் உள்ள நண்பர்கள் கொலை வழக்குகளை விளையாட்டாக விசாரிக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையான வழக்கில் சிக்கிக் கொள்கிறார்கள்.
டூ கிரேவ்ஸ் (Two Graves) – ஆகஸ்ட் 29, 2025
இரண்டு சிறுமிகள் காணாமல் போனதால் கடலோர நகரம் அதிர்ச்சியடைகிறது. உண்மையை அறிய ஒரு வயதான பெண் தியாகம் செய்கிறாள்.
லவ் அன்டேங்கிள்டு (Love Untangled) – ஆகஸ்ட் 29, 2025
ஒரு டீனேஜ் பெண் தனது பள்ளி ஹார்ட் throப் கவனத்தை ஈர்க்க தனது பாணியை மாற்றுகிறாள். ஆனால் ஒரு புதிய மாணவர் வருகையால் அவளது வாழ்க்கை மாறுகிறது.
கராத்தே கிட் லெஜெண்ட்ஸ் (Karate Kid Legends) – ஆகஸ்ட் 29, 2025
லீ ஃபாங் என்ற குங்ஃபூ புரோடீஜி நியூயார்க் நகரத்திற்கு வந்த பிறகு கராத்தே போட்டியில் பங்கேற்கும் பயணம் தொடங்குகிறது. திரு. ஹான் மற்றும் டேனியல் லரூஸ்ஸோவின் உதவியுடன் அவர் புதிய சவால்களை எதிர்கொள்கிறார்.