Biggest Flop movie : பட்ஜெட் 45 கோடி... வசூல் வெறும் 60 ஆயிரம்; இந்தியாவின் மிகப்பெரிய பிளாப் படம் பற்றி தெரியுமா?

Published : Aug 26, 2026, 05:26 PM IST

Disaster Indian Movie in Box Office : இந்திய சினிமாவில் மிகப்பெரிய தோல்விப் படம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த படம் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதற்கு 60 ஆயிரம் மட்டுமே வசூல் கிடைத்தது.

PREV
14
Biggest Flop Movie in India

சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வசூலை ஈட்டுவது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்தப் படங்கள் படுதோல்வியை சந்திப்பதுண்டு. அந்த வகையில், பாலிவுட்டில் வெளியான ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து டிசாஸ்டர் படம் என்கிற மோசமான சாதனையை படைத்திருந்தது.

அந்த படத்தின் பெயர் ‘தி லேடி கில்லர்’. சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம், திரையரங்குகளில் மொத்தமாக வெறும் ரூ.60 ஆயிரம் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டு வெளியான ‘தி லேடி கில்லர்’ திரைப்படத்தை அஜய் பஹால் இயக்கியிருந்தார். அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த கிரைம் த்ரில்லர் படத்தை டி-சீரிஸ் நிறுவனம் தயாரித்தது. பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரபல நடிகர்கள் மற்றும் கணிசமான பட்ஜெட் என படத்திற்கு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புக்கான காரணங்கள் இருந்தன. ஆனால், படம் வெளியான பிறகு நிலைமை முற்றிலும் மாறியது.

Toxic Review : யாஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ

24
முதல் நாளே ரூ.38 ஆயிரம் வசூல்

‘தி லேடி கில்லர்’ படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் மோசமாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் முதல் நாளில் வெறும் 293 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் நாள் வசூல் சுமார் ரூ.38 ஆயிரம் என்ற அளவில் பதிவானது. தொடர்ந்து திரையரங்குகளில் படத்தின் வசூல் பெரிய அளவில் உயரவில்லை. இறுதியில், அதன் ஒட்டுமொத்த திரையரங்கு வசூல் சுமார் ரூ.60 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.45 கோடி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இந்த வசூல் மிகவும் குறைவானது. தயாரிப்புச் செலவுடன் மட்டுமல்லாமல், படத்தின் அச்சு மற்றும் விளம்பரச் செலவுகளைக் கூட திரையரங்கு வசூல் மூலம் ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

34
தோல்விக்கு காரணம் என்ன?

படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவரவில்லை என்பதுடன், வெளியீட்டுக்கு முன்பான ப்ரமோஷன் பணிகளும் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படம் வெளியாகியதே பல சினிமா ரசிகர்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

44
ஓடிடியும் கைவிட்டது

‘தி லேடி கில்லர்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற முன்னணி ஓடிடி தளங்களும் படத்தை வாங்க முன்வராத நிலையில், தயாரிப்பாளர்களுக்கு மாற்று வழியைத் தேடும் சூழல் ஏற்பட்டது. இறுதியில், திரைப்படத்தை யூடியூப்பில் இலவசமாக வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டதாம். கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் திரையரங்குகளில் சில ஆயிரம் ரூபாய்களையே வசூலித்த சம்பவம், இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளின் மிகப்பெரிய உதாரணங்களில் ஒன்றாக ‘தி லேடி கில்லர்’ படத்தை மாற்றியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories