பவன் கல்யாண் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான ஓஜி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.96 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் இப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய ஓப்பனர் படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் வெளிநாடுகளில் 42 கோடி வசூலித்துள்ளதாம். இதன்மூலம் முதல்நாளிலேயே ஓஜி திரைப்படம் உலகளவில் ரூ.138 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த லைஃப் டைம் வசூலே இவ்வளவுதான். அதை ஒரே நாளில் வாரிசுருட்டி இருக்கிறது பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம்.
24
அதிக வசூல் செய்த பவன் கல்யாண் படங்கள்
பவன் கல்யாணின் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களைப் பற்றிப் பார்க்கலாம். 2025-ல் வெளியான பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' முதல் நாளில் ரூ.47.50 கோடி வசூலித்தது. இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி மற்றும் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கினர். இதில் நிதி அகர்வால், பாபி தியோல் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.40.10 கோடி வசூலித்தது. வேணு ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நிவேதா தாமஸ், அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2021-ல் வெளியானது.
34
பீம்லா நாயக் மற்றும் அக்னயாதவாசி வசூல்
2022-ல் வெளியான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதியின் 'பீம்லா நாயக்' முதல் நாளில் ரூ.37.15 கோடி வசூலித்தது. இப்படத்தை சாகர் கே சந்திரா இயக்கியிருந்தார்.
பவன் கல்யாணின் 'அக்னயாதவாசி' முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.33.26 கோடி வசூலித்தது. 2018-ல் வெளியான இப்படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனு இம்மானுவேல் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
பவன் கல்யாண் மற்றும் சாய் துர்கா தேஜின் 'ப்ரோ' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.30.05 கோடி வசூலித்தது. 2023-ல் வெளியான இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியிருந்தார்.
பவன் கல்யாண் மற்றும் ஸ்ருதி ஹாசனின் 'கட்டமராயுடு' பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.25.71 கோடி வசூலித்தது. கிஷோர் குமார் பர்தசானி இயக்கிய இப்படம் 2017-ல் வெளியானது.
2016-ல் வெளியான பவன் கல்யாண் மற்றும் காஜல் அகர்வாலின் 'சர்தார் கப்பர் சிங்' முதல் நாளில் ரூ.25.39 கோடி வசூலித்தது. இப்படத்தை கே.எஸ்.ரவிந்திரா இயக்கியிருந்தார்.